டெல்லி வன்முறையை திசைத்திருப்பவே கொரோனா பீதி- மம்தா பானர்ஜி

 

டெல்லி வன்முறையை திசைத்திருப்பவே கொரோனா பீதி- மம்தா பானர்ஜி

டெல்லி வன்முறையை திசைத்திருப்பவே மத்திய அரசு, கொரோனா வைரஸ் குறித்த பீதியை மக்களிடம் கிளப்புவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி வன்முறையை திசைத்திருப்பவே மத்திய அரசு, கொரோனா வைரஸ் குறித்த பீதியை மக்களிடம் கிளப்புவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 3,100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த உயிர்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவிலும் 28 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதற்கிடையே கொரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும் ஹோலி பண்டிகையை கொண்டாடப்போவதில்லை என்றும் அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

mamta banerjee- Modi

இந்நிலையில் மேற்குவங்கம் மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் புனியாத்பூரில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “இன்று சிலர் கொரோனா, கொரோனா என கத்திக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா பயங்கரமான நோய் தான் ஆனால் அதுகுறித்த பீதியை மக்களிடம் கிளப்பக்கூடாது. டெல்லி வன்முறையை திசைத்திருப்பவே சில ஊடகங்கள் கொரோனா செய்தியை பெரிதுபடுத்துகின்றன.  மத்திய அரசே டெல்லியில் இறந்தவர்கள் ஒன்றும் கொரோனா வைரஸால் இறக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொளுங்கள். ஆரோக்கியமான மக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இதற்காக பாஜக அரசு மன்னிப்போ, வருத்தமோ கூட தெரிவிக்கவில்லை.”எனக் கூறினார்.