டெல்லியில் மோசமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் – இதுவரை 6 பேர் பலி

 

டெல்லியில் மோசமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் – இதுவரை 6 பேர் பலி

ஜனவரி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் மட்டும் டெல்லியில் 2835 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் 

ஜனவரி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் மட்டும் டெல்லியில் 2835 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 3 வாரங்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 870 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில்  6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

swine flu

உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் டெல்லியைச் சேர்ந்தவர் என்றும் மற்ற ஐந்து பேர்கள் வேறு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பைத் தடுக்க சுகாதாரத்துறை மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அச்சம் கொள்ளத்  தேவையில்லை 

மேலும், அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்குத்  தீவிர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை இயக்குனரகம் கூறியுள்ளது. ‘எச்1என்1 – இன்ஃப்ளுயன்சா வைரஸ்’ கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களுக்குள் காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

swine flu

கடந்த 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனமே, தற்போது பருவ காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என அறிவித்துவிட்டது. எனவே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்கள் அச்சம், பயம் மற்றும் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.