டெல்லியில் நவ. 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

 

டெல்லியில் நவ. 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் கடும் காற்று மாசு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடும் காற்று மாசு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு அதிகரித்துவந்த சூழலில் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது காற்று மாசின் அளவு 1010 புள்ளிகளை விட அதிகமாக இருக்கிறது. இதனால் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவரும் மாஸ்க் அணிந்துகொண்டு வெளியே செல்லும் படி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது பனி மூட்டமும் அதிகரித்துள்ளதால்  அங்குள்ள சாலைகள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றனர். இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதுடன் ரயில், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையை சமாளிக்க முடியாததால் அம்மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Delhi pollution

பட்டாசு வெடித்தது மட்டுமின்றி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களிலுள்ள விவசாயிகள் பயிர் கழிவுகளை நிலத்தில் எரித்ததே காற்று மாசுவுக்கு காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.