டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்தில் இருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: தென் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் மாலத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகர்ப்புறங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.