டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பி கொடுத்த யெஸ் பேங்க்…. நிம்மதியடைந்த பூரி ஜெகன்நாத் கோயில்……..

 

டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பி கொடுத்த யெஸ் பேங்க்…. நிம்மதியடைந்த பூரி ஜெகன்நாத் கோயில்……..

பூரி ஜெகன்நாத் கோயில் நிர்வாகம் டெபாசிட் செய்து இருந்த தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.397 கோடியை யெஸ் வங்கி திருப்பி கொடுத்துள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கிய யெஸ் கடந்த பல மாதங்களாக நிதிநெருக்கடியில் சிக்கி தவித்தது. இந்நிலையில் அண்மையில் யெஸ் வங்கியின் மோசமான நிலைமையை காரணம் காட்டி அந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவை கலைத்தது. மேலும் அந்த வங்கி நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.

பூரி ஜெகன்நாத் கோயில்

யெஸ் பேங்க் கிட்டத்தட்ட திவால் நிலைக்கு சென்றதால் அந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களோடு பூரி ஜெகன்நாத் கோயிலும் பரிதவித்து போனது. பூரி ஜெகன்நாத் கோயிலும் யெஸ் பேங்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட டெபாசிட் கணக்குகளை வைத்து இருந்தது. இதனால் டெபாசிட் செய்த பணம் கிடைக்குமா என சந்தேகம் கோயில் நிர்வாகத்துக்கு எழுந்ததாக தெரிகிறது.

பணம்

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை தளர்த்தியதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் யெஸ் பேங்க் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. பூரி ஜெகன்நாத் கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, வங்கியில் டெபாசிட் தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.397 கோடியை அந்த கோயில் நிர்வாகத்தின் எஸ்.பி.ஐ. வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்தது. மேலும் மொத்தம் ரூ.156 கோடி மதிப்பிலான மேலும் சில டெபாசிட் கணக்குகளை அதன் முதிர்வு காலம்  (30-3-2020) முடிவடைந்தவுடன் அதே (எஸ்.பி.ஐ.) வங்கி கணக்கு அனுப்பப்படும் என யெஸ் பேங்க் அதிகாரிகள் தெரிவித்தனர்.