டெங்கு குணப்படுத்தக் கூடிய நோய் தான்: அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்..

 

டெங்கு குணப்படுத்தக் கூடிய நோய் தான்: அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்..

மழைக் காலம் துவங்கிய நாள் முதல் டெங்குகாய்ச்சல் விரைவாகப் பரவி வருகிறது.

மழைக் காலம் துவங்கிய நாள் முதல் டெங்குகாய்ச்சல் விரைவாகப் பரவி வருகிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருபவர்களில், 5 பேருக்காவது டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

Minister Vijayabaskar

தமிழக அரசும் டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நேரில் சென்று பார்வையிட்டு, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

Minister Vijaya baskar

அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டெங்கு குணப்படுத்தக் கூடிய நோய் தான் என்றும் டெங்கு குறித்த முழுமையான விழிப்புணர்வுடன் பெற்றோர்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, டெங்குகாய்ச்சல் பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை டெங்குவில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.