டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 385 குழுக்கள்

 

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 385 குழுக்கள்

டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டால், புகை போக்கி மூலம் அந்த பகுதிகளில் கொசுக்கள் விரைவாக அழிக்கப்படும். டெங்கு பாதிப்புகள் குறித்த சந்தேகங்கள், விளக்கங்கள் பெற, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறைக்கு 044 24334811, 9444340496 என்ற எண்களில் தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம்.

பொது சுகாரதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,486 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதில், 13 பேர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார். இந்தாண்டு இதுவரை 1,700 பேர் டெங்கு காய்ச்சல் தாக்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் கூறினார்.

Preventive measures taken

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அவரவர் வசிப்பிடங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் அரசு சார்பில், டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய Aedes  கொசுக்கள்  சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வைத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஆய்வு முடிவில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டால், புகை போக்கி மூலம் அந்த பகுதிகளில் கொசுக்கள் விரைவாக அழிக்கப்படும். டெங்கு பாதிப்புகள் குறித்த சந்தேகங்கள், விளக்கங்கள் பெற, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறைக்கு  044 24334811, 9444340496 என்ற எண்களில் தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம்.