‘டீ பார்ட்டி’யை கேள்விப்பட்டிருப்பீர்கள்! ‘டீ பாட்டி’ன்னா தெரியுமா? 30 ஆண்டுகளாக ‘டீ’ மட்டுமே அவருக்கு உணவு

‘டீ பார்ட்டி’யை கேள்விப்பட்டிருப்பீர்கள்! ‘டீ பாட்டி’ன்னா தெரியுமா? 30 ஆண்டுகளாக ‘டீ’ மட்டுமே அவருக்கு உணவு

கொரியா(சத்தீஸ்கர்) வழக்கமாக காலை, மாலையில் டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். குளிர் காலங்களில் கூடுதலாக ஒரு கப். ஆனால் 30 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் ஒரு பெண் இந்தியாவில் இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி பில்லி தேவி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர்வாழ்ந்து வருகிறார். கொரியாவில் ‘சாய் வாலி சாச்சி’ என நண்டு சிண்டுகளைக் கேட்டாலும் இவரிடம் கூட்டிச் செல்வார்கள். அனைவராலும் செல்லமாக அவ்வாறு அழைக்கப்படும் பில்லி தேவி தான் இந்த விசித்திரமான பெண். இவரிடம் பேசினால் டீ பார்ட்டி கேள்விப்பட்டிருக்கோம் இப்பத்தான் டீ பாட்டியை பார்க்கிறோம் என நினைக்கத் தோன்றும்.

கொரியா மாவட்டம் பாரதியா கிராமத்தை சேர்ந்த பில்லி தேவி, தனது 11-வது வயதில் இருந்து தேநீர் தவிர்து மற்ற ஆகாரத்தை எடுத்துக்கொள்வதை கைவிட்டுள்ளார். இதுகுறித்து பில்லி தேவியில் தந்தை ரதி ராம் கூறியதாவது: பில்லி தேதி அவரது 6-ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய பில்லிதேவி எதுவும் சாப்பிடாமல் படுத்துவிட்டார். மறுநாளில் இருந்து திட உணவு, தண்ணீர் சாப்பிடுவதில்லை. தந்தாலும் மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் சில ரொட்டி துண்டுகள், பால் எடுத்துக்கொண்ட பில்லி தேவி பின்னர் அதையும் ஒதுக்கி விட்டார். சில மாதங்களிலேயே கருப்பட்டி டீ  மட்டும் அருந்துவதை வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.

இது பற்றி பயந்து போன நாங்கள் மருத்துவர்களை அனுகினோம். பில்லி தேவிக்கு எந்தக் குறைபாடோ, நோயா இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்றார். இதுநாள் வரை டீ மட்டும் உட்கொண்டு ஆரோக்கியமாக, நோய் இன்றி வாழ்ந்து வரும் பில்லி தேவியை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தீவிர சிவ பக்தையான பில்லி தேவி, இறை வழிபாடு, டீ என ஒரு சிறு வட்டத்துக்குள் தனது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு வாழ்கிறார்.