டீசர் தேதி அறிவிப்பு – மீண்டும் கலக்க வரும் அதே ஜோடி…!

 

டீசர் தேதி அறிவிப்பு – மீண்டும் கலக்க வரும் அதே ஜோடி…!

சென்னை: விஜய் தேவரகொண்டாவின் “Dear Comrade” படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: விஜய் தேவர்கொண்டாவின் “Dear Comrade” படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

“பெல்லி சூப்புலு”, அர்ஜுன் ரெட்டி படங்களை தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன் வசம் ஆக்கியவர் டோலிவுட்டின் சென்சேஷன் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு நோட்டா படம் கை விரித்தாலும், அதற்கடுத்து வந்த டாக்ஸிவாலா தூக்கிவிட்டது.

தற்போது இவர் நடித்து வரும் “Dear Comrade” படத்தின் டீசர் வரும் 17ம் தேதி வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியாகும் தேதியை அறிவித்து படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dear comrade

இப்படத்தில் ரவுடி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். “இன்கேம் இன்கேம்” பாடல் மூலம் பல காதல் ஜோடிகளை தன் வசப்படுத்திய இவர்கள், இந்த படத்திலும் அப்படி ஏதேனும் மேஜிக் செய்வார்களா? என பார்ப்போம்.

பரத் கம்மா இயக்கியுள்ள இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், படத்திற்கு நம்ம ஊரு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தான் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டில் வெளியாகும் விஜய் தேவர்கொண்டாவின் முதல் படம் இது என்பதால், அவரது ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.