‘டீக்கடைகள் செயல்பட அனுமதி’ ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்.. முதல்வர் வெளியிட்ட முழு அறிவிப்பு உள்ளே!

 

‘டீக்கடைகள் செயல்பட அனுமதி’ ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்.. முதல்வர் வெளியிட்ட முழு அறிவிப்பு உள்ளே!

ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 

கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 45 நாட்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் சென்னையை தவிர மற்ற இடங்களில் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பாட்டன. அதே போல, டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் டீ கடைகள் செயல் படலாம் உள்ளிட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 

ttn

முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 

“அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்படும். பிற தணிக்கடைகள் காலை 10.30 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்படும்.

அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேனீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் .மேலும் தினமும் ஐந்து முறை கிருமி நாசினி தெளித்து கடையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்கவும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

பெட்ரோல் பங்குகள் பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும்.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் தடைகளும் மறு உத்தரவு வரும் வரை கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.