டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம்: வைரல் வீடியோ

 

டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம்: வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம் ஆடிய வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம் ஆடிய வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், அடுத்த போட்டியில் வங்காளதேச அணியையும் வீழ்த்தியது. நேற்று நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதைத் தொடர்ந்து, இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகுஸ், ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியுடன் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. இதனால் அந்த வீடியோ பலரால் உடனடியாக வைரலாக பகிரப்பட்டது. இந்த நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது அடுத்த லீக் போட்டியில் இலங்கையை நாளை எதிர்கொள்கிறது.