டி.டி.எஸ் வரியைக் குறைக்கக் கோரி துணை ஜனாதிபதியிடம் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மனு!

 

டி.டி.எஸ் வரியைக் குறைக்கக் கோரி துணை ஜனாதிபதியிடம் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மனு!

10 சதவீத டி.டி.எஸ் வரி செலுத்தி வருவதால் அதனை ரத்து செய்யக்கோரிப் பல நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வீழ்ச்சியையே சந்தித்து வரும் இந்தியப் பொருளாதாரம், கொரோனாவால் இன்னும் பாதிப்படைந்துள்ளது. கொரோனா காரணமாகப் பல துறைகள் செயல்படவில்லை. இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39 ஆவது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் செல்போன்கள் மற்றும் அவற்றின் உதிரிப் பாகங்களுக்கான வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

ttn

இந்நிலையில், நேற்று பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் காட்ர கட்ட பிரசாத், ரவி கொட்டாக்க ரா, கல்யாண் ஆகியோர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தனர்.

ttn

அப்போது அவர்கள் 10 சதவீதம் டிடிஎஸ் வரியைத் தள்ளுபடி செய்யக்கோரி மனு ஒன்றை அளித்தனர். திரைப்பட வினியோகஸ்தர்கள்  படங்களை விநியோகிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 10 சதவீத டி.டி.எஸ் வரி செலுத்தி வருவதால் அதனை ரத்து செய்யக்கோரிப் பல நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.