டி.எம் கிருஷ்ணாவின் நூல் வெளியீட்டுக்கு தடை ..! கலாஷேத்திரா சொல்லும் காமடி காரணம்..!!

டி.எம் கிருஷ்ணாவின் நூல் வெளியீட்டுக்கு தடை ..! கலாஷேத்திரா சொல்லும் காமடி காரணம்..!!

கர்நாடக இசை பாடகரும் ‘மெகசசே’ பரிசு பெற்ற எழுத்தாளருமான டி.எம் கிருஷ்ணா, சென்னை குப்பத்து மக்களுக்கு கர்நாடக இசை கற்பிக்கப் போகிறேன் என்று அவர் கிளம்பியதிலிருந்து அவர் சார்ந்த சமூகம் ; அவரை முற்றிலுமாகப் புறக்கணிக்க தொடங்கி இருக்கிறது!

krishna

இந்த நிலையில் மூன்று வருட ஆய்வுக்குப் பிறகு அவர் எழுதி இருக்கும்  ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ மிருதங்கத்தின் சுருக்கமான வரலாறு என்கிற நூலின் வெளியீட்டு விழா கலாஷேத்திராவில் நடப்பதாக இருந்தது,அந்த விழாவை கடைசி நேரத்தில் சமூக அமைதிக்கு இடையூறாக இருக்கும் என்கிற அச்சத்தில் கேன்சல் செய்திருக்கிறது.

krishna

அதற்குக் காரணம் அந்த நூல் மிருதங்கம் பற்றுப் பேசாமல் வழிவழியாக மிருதங்கம் செய்யும் ஒரு தலித் கிறித்தவ குடும்பத்தைப் பற்றிப் பேசுவதுதான் என்று இசைத்துறையில் இருக்கும் நடுநிலையான கலைஞர்கள் சொல்கிறார்கள்.
தஞ்சையைச் சேர்ந்த செபஸ்ட்டியானுக்கு மூன்று பிள்ளைகள். செங்கோல், பர்லாண்டோ ( ஃபெர்னாண்டஸ்) சிட்டி. இவர்களின் பரம்பரை தொழிலே மிருதங்கம், தவில் போன்ற வாத்தியங்களைச் செய்வதுதான்.

krishna

இதில் பர்லாண்டோ என்கிற ஃபெர்னாண்டஸ் நினைவாக தாளவாத்தியம் செய்வோருக்கு ஆண்டு தோறும் விருதுகூட வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகாலம் … நான்கு தென்மாநிலங்களிலும் பயணம் செய்து தாளவாத்தியங்கள் செய்யும் கலைஞர்களைத் தேடி அவர்களுடன் பேசி இந்த நூலை எழுதி இருக்கிறார் டி.எம் கிருஷ்ணா.

mani

காலகாலமாக பக்கவாத்தியம் செய்யும் அவர்களை ஏன் கர்நாடக சங்கீதம் கற்க அனுமதிப்பதில்லை.பாலக்காடு மணி அய்யருடைய தாள நுட்பங்களை குறித்து மணிக்கணக்காக பேசும்போது அந்த நாதம் பிறக்கும் வாத்தியத்தை செய்தவனைப் பற்றி ஏன் ஒரு சின்னக் குறிப்புகூட இல்லை என்பது போன்ற பல கேட்கக்கூடாத கேள்விகளை இந்த நூலினூடே எழுப்பி இருக்கிறார் டி.எம் கிருஷ்ணா.அதுதான் வெளியீட்டு விழா தடைக்கு காரணம்.