‘டிரைவர், அலுவலக உதவியாளர், கிளர்க்’ காலி பணியிடங்களுக்குக் குவிந்த பி.எச்.டி., எம்.ஃபில் பட்டதாரிகள்!

 

‘டிரைவர், அலுவலக உதவியாளர், கிளர்க்’ காலி பணியிடங்களுக்குக் குவிந்த பி.எச்.டி., எம்.ஃபில் பட்டதாரிகள்!

தமிழகத்தில் வேலையில்லாமல் திண்டாடுபவர்களுக்கா பஞ்சம்.. துப்புரவுப் பணியாளர் வேலைக்குக் கூட ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் குவிக்கின்றனர்.

தமிழகத்தில் வேலையில்லாமல் திண்டாடுபவர்களுக்கா பஞ்சம்.. துப்புரவுப் பணியாளர் வேலைக்குக் கூட ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் குவிக்கின்றனர். அந்த அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. முதல்வர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது பல கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பின்மை இருக்காது என்றும் தெரிவிக்கப் பட்டது. ஆனால், இன்னும் பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் கையில் கோப்புகளுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். 

ttn

கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிரைவர், அலுவலக உதவியாளர், கிளர்க் ஆகிய 3 காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த காலி பணியிடங்களுக்கு நூற்றுக் கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அதற்கு இன்று நடைபெற்ற நேர்காணலில் ஏராளமான பட்டதாரிகள் குவித்தனர்.  குறிப்பாக நேர்காணலுக்கு வந்தவர்களுள் பி.எச்.டி., எம்.ஃபில் படித்தவர்கள் தான் அதிகமாம். அங்குக் குவிந்திருந்த இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு நேர்காணல் நடத்திய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.