டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை கிடைக்குமா?; இன்று தீர்ப்பு

 

டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை கிடைக்குமா?; இன்று தீர்ப்பு

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வேண்டி டிடிவி தினகரன் தொடுத்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வேண்டி டிடிவி தினகரன் தொடுத்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்து , டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓபிஸ் – இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. அதிமுகவின் நீண்டகால சின்னமான இரட்டை இலையை கைப்பற்றுவதில் இந்த இரு அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு அணியும் போட்டியிட்டதால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவிக்கு குக்கர் சின்னமும், அதிமுகவுக்கு மின் கம்பமும் வழங்கப்பட்டது. இதன் மீதான வழக்கு 5 மாதங்களுக்கு மேலாக தேர்தல் ஆணையத்தில் நடந்தது. கடைசியாக தேர்தல் ஆணையம் 2017 நவம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ் – இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் தினகரன் விடுவதாய் இல்லை, இரட்டை இலை சின்னம் வேண்டி டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு சென்றார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மத்திய அரசாங்கமும் அதிமுகவும் நெருக்கமாக இருப்பதால், டிடிவி தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வருவது மிகவும் சிரமம் என்றே பொது வெளியில் பேசப்பட்டு வருகிறது, தீர்ப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.