டிசம்பர் 26 சூரிய கிரகணம்.. பழனி முருகன் கோவிலில் நடை அடைப்பு !

 

டிசம்பர் 26 சூரிய கிரகணம்.. பழனி முருகன் கோவிலில் நடை அடைப்பு !

இந்த ஆண்டின் கடைசி கிரகணமான, நெருப்பு வளையச் சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்கிறது.

இந்த ஆண்டின் கடைசி கிரகணமான, நெருப்பு வளையச் சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்கிறது. இது குறித்துப் பேசிய மூத்த விஞ்ஞானி, டிசம்பர் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் தோன்றுகிறது. இது காலை 8 மணியிலிருந்து 3 மணி நேரம் தெரியும். கோவை,சென்னை, அவினாசி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தெளிவாகத் தெரியும் என்றும் அதனை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பொதுவாக கிரகணங்களின் போது கோவில் நடை அடைக்கப்பட்டு, கிரகணம் முடிந்த உடன் பூஜைகள் நடைபெறும்.

ttn

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் 5 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகணம் அன்று பழனி மலைக்கோவில் மட்டுமல்லாமல் வினன்குடி கோவில், பெரிய நாயகி அம்மன் கோயில், பெரியாவுடை கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் காலை 8:09 மணி 11:20 மணி வரை கிரகணம் அனுசரிக்கப்படுகிறது. 

ttn

இது குறித்துப் பேசிய பழனி கோயில் நிர்வாகிகள், “கிரகணத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:15 வரை இடைவேளையின்றி பூஜைகள் நடத்தப்படும். அதன் பின்னர் சுமார் 5 மணி நேரம் வரை கோவில் நடை அடைக்கப்பட்டு 11:20 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும். அதன் பின்னர், மலைக்கோயில் சுத்தம் செய்யப்பட்டு ரோக்ஷண பூஜைகள் நடைபெறும். அதனையடுத்து, பூஜைகள் முடிந்து மூலஸ்தானத்தில் சின்ன குமாரசுவாமி எழுந்தருளிய பிறகு தான் பக்தர்களுக்குத் தரிசனம், பூஜைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இதே போல சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு 7:30 மணி முதல் 11:30 மணி வரை 4 மணி நேரத்திற்கு நடை அடைக்கப்படுகிறது.