டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசுக்கு போட்டியாக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் 

 

டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசுக்கு போட்டியாக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் 

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்று மது வாங்கிச் சென்றனர்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்று மது வாங்கிச் சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஊரடங்கு முடியும் வரை திறக்க கூடாது என மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. மாறாக ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

tasmac

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சி, உயர்நீதி மன்றத்தில், மதுக்கடைகள் திறக்க பெற்ற தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வதாக தமிழக அரசு அறிவித்த காரணத்தினால், நமது தலைவர் நம்மவர் உத்தரவின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஒருவேளை தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகினால், “நமது  கருத்தையும் நீதிமன்றம் கேட்க வேண்டும்” என்பதே கேவியட் மனுவின் நோக்கமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.