டாஸ்மாக் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த நபர்கள்.. மதுக்கடைக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு!

 

டாஸ்மாக் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த நபர்கள்.. மதுக்கடைக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு!

உரிய  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என அனுமதியளித்த நீதிமன்றம், உரிய  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ttn

ஆனால் குடிமகன்கள் முறையாக அதனை பின்பற்றாததால் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக்குகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இது குடிமகன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 3 நாட்களில் மட்டுமே அரசுக்கு ரூ.294 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக மதுரையில் மண்டலத்தில் மட்டுமே ரூ.60 கோடிக்கு மேலாக மது விற்பனை ஆகியுள்ளது. இந்நிலையில் மதுக்கடையை மூடியதால் ஆத்திரமடைந்த குடிமகன்கள், 
மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக்குக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் மதுக்கடையில் மளமளவென தீ பரவியுள்ளது. அதனை பார்த்த அதிகாரிகள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மது பாட்டில்களில்  தீ பரவுவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.