‘டாஸ்மாக் டோக்கன்கள் கலர் ஜெராக்ஸ்’ போலீஸ் ஸ்டேஷனில் கம்பி எண்ணும் 16 பேர்!

 

‘டாஸ்மாக் டோக்கன்கள் கலர் ஜெராக்ஸ்’ போலீஸ் ஸ்டேஷனில் கம்பி எண்ணும் 16 பேர்!

செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 24 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. 

டாஸ்மாக்குகளில் டோக்கன் கொடுக்கப்பட வேண்டும், 550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டும், சமூக விலகலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், டோக்கன் தரும் இடமும் மது விநியோகம் செய்யும் இடமும் தனித்தனியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இன்று காலை திறக்கப்பட்டு விட்டன. ஆனால் சிவப்பு மண்டலங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 24 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. 

ttn

மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படாது என்று எண்ணிக் கொண்டிருந்த குடிமகன்களுக்கு, மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மது வாங்க கொடுக்கப்படும் டோக்கன்களில் முறைகேடு நடந்துள்ளது. கடலூரில் டாஸ்மாக் மதுபான டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்த சிலர் அதன் மூலம் மதுபாட்டில் வாங்க முயன்றுள்ளனர். ஆனால் அதனை கண்டுபிடித்த ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலீசார் கலர் ஜெராக்ஸ் எடுத்த 16 பேரையும் கைது செய்துள்ளனர்.