டாஸ்மாக் கடைகளை மூடாதவரை எது பன்னாலும் வேஸ்ட் தான் – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

 

டாஸ்மாக் கடைகளை மூடாதவரை எது பன்னாலும் வேஸ்ட் தான் – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

டாஸ்மாக் கடைகளை மூடாதவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வளவு எடுத்தாலும் பயன் தாராது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிப்பதற்கு பதிலாக மக்கள் அனைவருக்கும் முகக்கவசங்களை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவிவருகிறது. கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடாதவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வளவு எடுத்தாலும் பயன் தாராது.

டாஸ்மாக் கடைகளை மூடாதவரை எது பன்னாலும் வேஸ்ட் தான் – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட, மாநில அளவில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். கடந்த முறை போடப்பட்ட ஊரடங்கிலிருந்தே இப்போதுதான் வியாபாரிகளும் வணிக நிறுவனங்களும் மெல்ல மீண்டு வருகின்றன. அதற்குள் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டு விடுமோ என வியாபாரிகளும், வணிக நிறுவனங்களும் அச்சத்தில் உள்ளனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அப்படி எதுவும் செய்யக்கூடாது” எனக் கூறினார்.