டாஸ்மாக்கில் விற்பனை படு ஜோர்; மூன்று நாட்களில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை

 

டாஸ்மாக்கில் விற்பனை படு ஜோர்; மூன்று நாட்களில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக் விடுமுறை காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே காத்திருந்து மது வகைகளை அரசியல் கட்சியினர் உள்பட குடிமகன்கள் வாங்கி சென்றனர்

சென்னை: டாஸ்மாக் கடைகள் இன்று முதல் விடுமுறை என்பதால், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.423 கோடிக்கு வருவாய் ஈட்டியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு வருகிற 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Liquor shop

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசு நடத்தி வரும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 19-ம் தேதி தான் கடை மீண்டும் திறக்கப்படும்.

டாஸ்மாக் விடுமுறை காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே காத்திருந்து மது வகைகளை அரசியல் கட்சியினர் உள்பட குடிமகன்கள் வாங்கி சென்றனர். இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களில் மட்டும், சுமார் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.இதில், ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்சமாக ரூ.165 கோடி மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று ரூ.141 கோடிக்கும், வெள்ளிக்கிழமையன்று ரூ.117 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Liquor people.

தமிழக அரசின் வருவாய் ஈட்டலில் டாஸ்மாக் மதுக்கடைகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!