டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் டி.சி.எஸ்.

 

டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் டி.சி.எஸ்.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை நிலவரப்படி) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், கோடக் மகிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி உள்பட 8 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டு மொத்த அளவில் ரூ.89,535 கோடி குறைந்தது. அதேசமயம், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.38 ஆயிரம் கோடி உயர்ந்தது.

டி.சி.எஸ்.

டாப் 10 நிறுவனங்கள்                     பங்குகளின் சந்தை மதிப்பு

1. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்           ரூ.8.27 லட்சம் கோடி
2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்           ரூ.7.50 லட்சம் கோடி
3. எச்.டி.எப்.சி. வங்கி                      ரூ.6.05 லட்சம் கோடி
4. இந்துஸ்தான் யூனிலீவர்                ரூ.3.76 லட்சம் கோடி
5. எச்.டி.எப்.சி. நிறுவனம்                  ரூ.3.66 லட்சம் கோடி

கோடக் மகிந்திரா வங்கி
6. இன்போசிஸ்                          ரூ.3.33 லட்சம் கோடி
7. ஐ.டி.சி.                                ரூ.3.24 லட்சம் கோடி
8. கோடக் மகிந்திரா வங்கி                ரூ.2.87 லட்சம் கோடி
9. ஸ்டேட் வங்கி                        ரூ.2.75 லட்சம் கோடி
10. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி                    ரூ.2.65 லட்சம் கோடி