டாப் 10 காவல்நிலையங்களில் பெரியகுளம் 8-வது இடம்

 

டாப் 10 காவல்நிலையங்களில் பெரியகுளம் 8-வது இடம்

இந்திய அளவில் டாப் 10 காவல் நிலையங்களில் பெரியகுளம் காவல்நிலையம் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

தேனி: இந்திய அளவில் டாப் 10 காவல் நிலையங்களில் பெரியகுளம் காவல்நிலையம் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்படும் கள ஆய்வின்படி, சிறப்பாக செயல்படக்கூடிய காவல்நிலையங்களை வருடம் தோறும் மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியலிடுவது வழக்கமாகும். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் கேவாடியாவில் இந்திய அளவிலான டிஜிபி மற்றும் ஐ.ஜிக்களுக்கான மாநாடு நேற்று நடைபெற்றது.

அம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். அப்போது, 2018-ம் ஆண்டுக்கான நாட்டிலேயே சிறந்த  10 காவல்நிலையங்களின் பெயர்களை ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

அந்த வகையில் சிறந்த 10 காவல்நிலையங்களில் தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல்நிலையம் 8-வது இடத்தையும், புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலையம் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய அளவில் இடம் பிடித்ததை, அந்தக் காவல்நிலைய அதிகாரிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். மேலும், ராஜஸ்தான் மாநில கலு காவல்நிலையம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜரத்திலிருந்து ஒரு காவல்நிலையமும் 10 இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.