டாக்டருக்கு கொரோனா அறிகுறி – ஈரோடு ரெயில்வே மருத்துவமனை மூடல்

 

டாக்டருக்கு கொரோனா அறிகுறி – ஈரோடு ரெயில்வே மருத்துவமனை மூடல்

ரெயில்வே மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

ஈரோடு: ரெயில்வே மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எந்தளவு உள்ளது என்பது தொடர்பான தகவல்களை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். சுமார் 3018 வென்டிலேட்டர் சாதனங்களும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சுமார் 13 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

erode

இந்த நிலையில், ஈரோட்டில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து, அவர் மூலம் மற்றவர்களுக்கும் வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதால் கொரோனா அச்சம் காரணமாக ஈரோடு ரெயில்வே மருத்துவமனை மூடப்பட்டது.