“டவர் வைக்க இடம் கொடுத்தா 80 லட்சம் அட்வான்ஸ்; மாத 45 ஆயிரம் வாடகை” : ஏர்டெல் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கும்பல்..!?

 

“டவர் வைக்க இடம் கொடுத்தா 80 லட்சம்  அட்வான்ஸ்; மாத 45 ஆயிரம் வாடகை” : ஏர்டெல் பெயரைச் சொல்லி  ஏமாற்றும் கும்பல்..!?

அக்ரிமண்ட் பேப்பர் உங்க வீட்டுக்கு வரும்…’ என்பது போல செல்கிறது  அந்த  மோசடி ஆடியோ பேச்சு.

இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்  படுகுழியில் விழுந்துள்ளது. AGR எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 92,000 கோடி ரூபாய் AGR பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் எந்த நேரமும் இந்த நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

ttn

இதுவொருபுறமிருக்க ஏர்டெல் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்று ஒருவருக்கு போன் கால் வந்துள்ளது. அதில் ஏர்டெல்  டவர் வைக்க ஒன்றரை செண்ட்  நிலம் தேவைப்படுகிறது. அது காலி  இடமாக இருந்தாலும் சரி, மாடியாக  இருந்தாலும் சரி.  டவர்  வச்சா அந்த ஏரியாவுல எந்த டவர் ப்ராப்ளமும்  வராது. அதுக்காக 15 வருஷம் ஒப்பந்தம் போட்டு 80 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையும், மாதம் 45 ஆயிரம் ரூபாய் வாடகை  மாதிரியும் கிடைக்கும்.

அதுக்கு உங்க நிலத்தோட டாக்குமெண்ட், உங்க ஆதார் கார்டு நம்பர், போட்டோ இதையெல்லாம் இந்த நம்பருக்கு அனுப்பி வைங்க. நான் உங்க ஃபைலை ரெடி பண்ணி வெரிஃபிகேஷனுக்கு அனுப்பிடுவேன். அவங்க உங்க நிலத்தை சேட்டிலைட் மூலமா செக் பண்ணுவாங்க’ என்று எழுதி வைத்ததை பார்த்து படிப்பது போல மடமடவென சொல்ல, எதிர்புறத்தில் பேசியவர், ஏர்டெல் கம்பெனி நஷ்டத்துல போதாம்ல, பணத்த ஒழுங்கா கொடுப்பீங்களா  என்று கலாய்ப்பது போல கேட்க, சற்று ஆடி போன அந்த நபர்,  சார் கண்டிப்பா தருவோம் சார், இத அரசுடன்  சேர்ந்து தான் பண்ணுறோம் என்று சமாளிக்கிறார். 

ttn

இவர்களின் பேச்சு அடுத்த கட்டமாக பணத்தை கறக்கும்  நிலைக்கு செல்கிறது. அதாவது, உங்க நிலம் ஓகேவான பிறகு நீங்க நீங்க வெறும் 4,500 ரூபாய் கொடுக்கணும் சொல்கிறார். பிறகு ஹைகோர்ட் மூலமாக உங்களுக்கு அக்ரிமண்ட் பேப்பர் உங்க வீட்டுக்கு வரும்…’ என்பது போல செல்கிறது  அந்த  மோசடி ஆடியோ பேச்சு.

ttn

தமிழகத்தில் பலரது  தொலைபேசி எங்களுக்கு  உங்கள் வங்கி கணக்கு பிளாக் ஆகிவிட்டது. உங்களுக்கு இந்த லோன் கிடைத்துள்ளது. கார்  பரிசாக கிடைத்துள்ளது என பல நூறு கால்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற மோசடி பேர் வழிக ள்  நாளுக்கு நாள் தங்கள் அணுகு முறையையும் நூதனமாக மாற்றி கொண்டே வருகிறர்கள் என்பது சான்று தான் மேற்கூறிய செய்தி. நிலம் வைத்திருப்போரை அடையாளம் கண்டு ஏர்டெலிலிருந்து பேசுகிறோம் என்று கூறி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் இதுபோன்ற கும்பல், அவர்கள் காரியம் முடிந்ததும், குறிப்பிட்ட அந்த எண்ணை  தூக்கி வீசிவிட்டு , அடுத்த நம்பரையும், நபரையும் தேடி செல்ல தொடங்கிவிடுகிறார்கள். இதுபோன்ற செய்திகள் வெறும்  செய்தியாக மட்டுமில்லாது விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.