ஞானியர்களுக்கும் யோகியர்களுக்கும் தேஜஸ் பெற செய்த விரதம் கந்த சஷ்டி விரதம்

 

ஞானியர்களுக்கும் யோகியர்களுக்கும் தேஜஸ் பெற செய்த விரதம் கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதத்தின் முக்கியத்துவங்களை பற்றி இந்த பதிவில் பார்போம்.

விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகை உண்டு. வியாழன், சனி போன்ற ஏதாவது ஒரு நாள் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும். மாதத்தின் ஏதாவது ஒரு நாள் உதாரணமாக அமாவாசை,பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதம். மாதத்தின் இரு நாட்கள் ஏதாவது ஒரு திதியில் உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் நாட்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது.

muraugan

ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டி வரும் கந்த சஷ்டி விரதம். அது மட்டுமல்ல சிறப்பான பலன்களைத் தரும் ஒப்பற்ற விரதமும் இதுவாகும் . ஐப்பசி மாதம் கந்த சஷ்டி தினத்தில்தான் முருகப் பெருமான், தன் அவதாரத்துக்குக் காரணமான சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோரின் துன்பம் நீக்க, சூரபத்மனை வேலவன் சம்ஹரித்த நாளே ஐப்பசி மாத சஷ்டி தினம். இந்த நாளில் தீமைகள் விலகி மங்கலம் உண்டானதால் சஷ்டி விரதம் முக்கிய விரத நாளாக போற்றப்படுகிறது. மனம் போனபடி செல்லும் புலன்களை அடக்கத்தான் இந்த விரதங்கள் பயன்படுகின்றன.

மனதினை அடக்க ஒரு நல்ல வழி உண்டி சுருக்குதல்தான். அதிலும் விரத நாட்களில்  உண்டியை நீக்குதல் இன்னும் சிறப்பானது.ஞானியர்கள், யோகியர் எல்லாம் இந்த விரதங்களால்தான் சிறப்பினை அடைந்தார்கள்.

murugadf

பசித்த நிலையில் அவர்களின் தேஜஸ் மெருகேறி தெய்வ நிலையினை பெற்றார்கள். அதனாலேதான் அவர்களைக் கண்டவுடன் நாம் வணங்குகிறோம். விரதங்களால் உடல், மனம் கட்டுப்படும்.

சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பானதாக மாறும் என்பதுதான். இத்தனை சிறப்புமிக்க சஷ்டி விரதம் காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஐப்பசி மாதம் தீபாவளி அடுத்த பிரதமை நாளில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு சஷ்டி நாளில் முடியும். 

ஐப்பசி மாத சஷ்டியில் தொடங்கி ஒரு முழு ஆண்டில் வரும் 24 சஷ்டியிலும் விரதமிருப்பது மிகுந்த மேன்மையான பலன்களை தரும்.முடியாதவர்கள் இந்த ஐப்பசி சஷ்டி விரதம் இருக்கலாம்.

muruganhjk

ஆனால் ஆறு நாட்களுமே விரதம் இருப்பதுதான் முக்கியமானதாகும். காலையில் எழுந்து தூய்மையாகி, திருநீறிட்டு முருகப்பெருமானை தியானிக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் முருகனை ஆராதித்து வழிபட வேண்டும். 

உடலையும் மனதையும் சீராக்கும் இந்த கந்த சஷ்டி விரதத்தினை நவம்பர் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி13-ஆம் தேதி வரை கடைபிடிக்கலாம் .

இந்த நாளில் முடிந்த வரை உண்ணாநோன்பிருந்து எல்லாம் வல்ல முருகப்பெருமானின் ஆசியை பெறலாம்.