ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா!

 

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா!

ஜோதிகா நடிப்பில் தயாராகிவரும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார். இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்களில் நடித்தார். 

 

 

இந்நிலையில் தற்போது ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கின்றனர். பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதை ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் காட்டுகிறது. மேலும் இப்படம் மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.