ஜே.என்.யூ தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இந்து ரக்‌ஷாதள்! ஏ.பி.வி.பி-யை தப்பவைக்கும் செயலா?

ஜே.என்.யூ தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இந்து ரக்‌ஷாதள்! ஏ.பி.வி.பி-யை தப்பவைக்கும் செயலா?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தள் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மற்ற பல்கலைக் கழகங்களிலும் இதுபோல் தாக்குதல் நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த கும்பல் போலீசார் முன்னிலையிலேயே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை நடத்தியது ஏ.பி.வி.பி என்ற பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவு என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் மற்றொரு இந்து அமைப்பான இந்து ரக்‌ஷாதள் தாங்கள்தான் இந்த தாக்குதலை நடத்தினோம் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பூபேந்தர் தோமர் என்கிற பிங்கி சௌதிரி வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் கம்யூனிஸ்டுகளின் புகலிடமாக்க உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் நம்முடைய நாடு மற்றும் மதத்தைப் புறக்கணிக்கின்றனர். நம்முடைய மதம் நாட்டுக்கு எதிரானது என்ற வகையில் அவர்கள் செயல்பாடு உள்ளது. இதனால் தாக்குதல் நடத்தினோம். இதுபோன்று தேச விரோதமாக செயல்படும் இதர பல்கலைக் கழகத்துக்குள்ளும் நுழைந்து தாக்குவோம்” என்று கூறியிருந்தார்.
ஏ.பி.வி.பி டெல்லி இணை செயலாளர் அனிமா சோன்கார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் தொடர்பு உள்ளது என்று பரபரப்பு பேட்டி அளித்த சூழ்நிலையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
இது டெல்லி ஜே.என்.யூ தாக்குதலில் ஏ.பி.வி.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு உள்ள பின்னணியை மறைக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசாரும் பிங்கி சௌதிரியிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.