ஜே.என்.யூ .கன்ஹையா குமார் மீது வழக்கு தொடர கெஜ்ரிவால் அனுமதி -பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கண்டனம்..

ஜே.என்.யூ .கன்ஹையா குமார் மீது வழக்கு தொடர கெஜ்ரிவால் அனுமதி -பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கண்டனம்..

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் தேசத்துரோக வழக்கில் ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் மற்றும் 9 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தில்லி அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது, இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் காங்கிரஸின் ஆதரவாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

kanhaiya kumar

தேசத்துரோக வழக்கில் கன்ஹையா குமார் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியதற்காக திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை “நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு  விலை போனீர்கள் ?”என கடுமையாக தாக்கியுள்ளார் . 

தேசத்துரோக வழக்கில் கன்ஹையா குமார் மீது வழக்குத் தொடர டெல்லி அரசாங்கத்தின் அனுமதி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம்  கெஜ்ரிவால் அமைதியாக சரணடைவதை காமிக்கிறது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கூறியுள்ளது.

anurag

டெல்லி அரசாங்கத்தின் முடிவுக்கு பதிலளித்த கன்ஹையா தனது  ட்வீட்டுகளில், “தேசத்துரோக வழக்கில் வழக்குத் தொடர அனுமதி வழங்கிய தில்லி அரசுக்கு நன்றி. இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு டெல்லி காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கு விரைவாக  நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும், , நீதிமன்றத்தில் நீதி உறுதி செய்யப்பட வேண்டும். உண்மை எப்போதும் மேலோங்கும். ”என்றார் 

அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்த  டெல்லி போலீஸ், பிப்ரவரி 9, 2016 அன்று ஒரு போராட்டத்தின்போது கன்ஹையாவும் மற்றவர்களும் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியதாகவும், ஜே.என்.யூ வளாகத்தில் தேசத்துரோக முழக்கங்களுக்கு ஆதரவளித்ததாகவும் கூறியிருந்தது .