ஜெ. இல்லத்தை நினைவிடமாக்க ஆட்சேபனை இல்லை: அரசுக்கு அறிக்கை தாக்கல்!

 

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்க ஆட்சேபனை இல்லை: அரசுக்கு அறிக்கை தாக்கல்!

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற எந்த ஆட்சேபனையும் எழவில்லை என சமூக தாக்க மதிப்பீட்டு குழு சென்னை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற எந்த ஆட்சேபனையும் எழவில்லை என சமூக தாக்க மதிப்பீட்டு குழு சென்னை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவர் உயிருடன் இருந்த வரை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ என்ற இல்லத்தில் தான் வாழ்ந்தார்.

veda nilayam

அவர் மறைந்ததையடுத்து, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், போயஸ் கார்டன் பகுதியில் விசிப்பவர்களிடம் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் தேனாம்பேட்டையில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்த கருத்துகள் அடங்கிய விரிவான அறிக்கையை, சமூக தாக்க மதிப்பீட்டுக் குழு சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இன்று தாக்கல் செய்துள்ளது.ஏற்கனவே, நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், உபரியாக காலியிடம் எதுவும் இல்லை என்றும் சமூக தாக்க மதிப்பீட்டு குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jaya house

மேலும், வேதா நிலையத்தில் எவரும் வசிக்காததால் குடும்பங்கள் இடம் பெயரும் பிரச்சினைக்கு இடமில்லை என்றும், நினைவிடமாக மாற்றுவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, போயஸ் கார்டனை நினைவில்லமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.