ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

 

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ்-சசிதேவி தம்பதியினர். இவர்களுக்கு ரெங்கநாதன் என்ற 4 வயது சிறுவன் உள்ளான். சசிதேவி தன்னுடைய மகன் ரெங்கநாதனுடன் கடைத்தெருவுக்கு சென்றுள்ளார். அப்போது ரெங்கநாதன் அங்கிருந்த கடை ஒன்றிலிருந்த ஜெல்லி மிட்டாயை கேட்டுள்ளான். உடனே அந்த கடையில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் ஜெல்லி மிட்டாயை வாங்கி கொடுத்துள்ளார். 

இதையடுத்து ஜெல்லியை திண்று கொண்டிருக்கும் போதே சிறுவன் ரெங்கநாதன் மயக்கமடைந்தார். உடனே அருலிருந்தவர்கள் ரெங்கநாதனை பரிசோதித்து பார்த்ததில் அவன் உயிரிழந்தது தெரியவந்தது.  சிறுவனின் உடல் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெல்லி சாப்பிட்டதால்தான் சிறுவன் உயிரிழந்தான் என உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் நகர போலீஸார் சம்மந்தப்பட்ட கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஜெல்லி மிட்டாய்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சௌமியாவிடம் கேட்ட போது ஜெல்லி மிட்டாய் உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவ்வாறு அடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.