‘ஜெய் ஹிந்த்’ என்று கூறிய பிரியங்கா: யுனிசெப்-பில் இருந்து நீக்கக் கோரி பாகிஸ்தான் மனு!

 

‘ஜெய் ஹிந்த்’ என்று கூறிய பிரியங்கா: யுனிசெப்-பில் இருந்து  நீக்கக் கோரி பாகிஸ்தான் மனு!

யுனிசெப்-பின் நல்லெண்ண தூதராக உள்ள  நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இஸ்லாமாபாத்: யுனிசெப்-பின் நல்லெண்ண தூதராக உள்ள  நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில், இந்திய விமானி அபிநந்தனை  பாகிஸ்தான் சிறை பிடித்தது. ஆனால்  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு இந்தியர்கள் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் யுனிசெப்-பின் நல்லெண்ண தூதராக உள்ள  நடிகை பிரியங்கா சோப்ராவும் ஜெய் ஹிந்த்  என்று கூறியிருந்தார். இதற்கு சமூக வலைதளவாசிகள் எதிர்ப்பு கூறி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

priyanga

அதில், ‘பிரியங்கா சோப்ரா, இந்திய ஆயுதப்படைக்குப் பிரியங்கா சோப்ரா ஆதரவளித்துள்ளார். நடுநிலை வகிக்க வேண்டிய பிரியங்கா சோப்ரா, இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம், அந்தப் பதவி வகிக்க தகுதியில்லாதவர் ஆகிவிட்டார். அதனால் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும். இல்லையென்றால் யுனிசெப், அவரை நீக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆன்லைன் மூலம் யுனிசெப்-புக்கு அவர்கள் மனு அளித்துள்ளனர். அதில் சுமார் 2,200 பேர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.