ஜெயலலிதா போன்று பொட்டு, கொண்டை: ஆளும் கட்சியை சீண்டும் ‘அக்னி தேவ்’ டிரைலர்!

 

ஜெயலலிதா போன்று பொட்டு, கொண்டை: ஆளும் கட்சியை சீண்டும் ‘அக்னி தேவ்’ டிரைலர்!

‘ரோஜா’ நாயகி மதுபாலா, பாபில் சிம்ஹா நடித்துள்ள ‘அக்னி தேவ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘ரோஜா’ நாயகி மதுபாலா, பாபில் சிம்ஹா நடித்துள்ள ‘அக்னி தேவ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்னி தேவ்’ திரைப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்தி சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம லைக்ஸ் குவித்து வருகிறது.

பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். மிரட்டலான அரசியல் தலைவராக மதுபாலா நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், ரம்யா நம்பீசன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

agnidev

பேருந்து நிலையத்தில் நடைபெறும் பெண் பத்திரிகையாளரின் படுகொலை, அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, அவருக்கும் பெண் அரசியல் தலைவருக்கும் இடையே நடக்கும் மோதல் என விறுவிறுப்பாக செல்லும் அக்னி தேவ் டிரைலர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

agnidev

அரசியல் கட்சி தலைவியாக நடித்துள்ள மதுபாலாவின் காஸ்டியூம், மேக்-அப் போன்றவை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடுவது போல் அமைந்துள்ளது. கட்சியினரை பார்த்து மதுபாலா பேசும் வில்லத்தனமான வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தில் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டதற்கே தமிழக அரசு தடை போட வைத்தது. இந்நிலையில், ‘அக்னி தேவ்’ படத்தின் டிரைலர் பாரபட்சம் இல்லாமல் ஆளும் கட்சியை சீண்டும் வகையில் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.