ஜெயலலிதா பயோபிக் நடிகைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 

ஜெயலலிதா பயோபிக் நடிகைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக் படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்தின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக் படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்தின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதராசபட்டினம், தலைவா, தேவி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி அவரது பயோபிக் படத்தை இயக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு தமிழில் ‘தலைவி’ என்ற டைட்டிலும், ‘ஜெயா’ என ஹிந்தியில் டைட்டிலும் வைத்துள்ளனர்.

jayalalithaa

இந்தப் படத்தை விப்ரி மீடியா எனும் நிறுவனம், பிரமாண்ட பொருட்செலவில் பன்மொழித் திரைப்படமாக தயாரிக்கவுள்ளது. நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க, தாம் தூம், குயீன் போன்ற படங்களில் நடித்த நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

kangana ranaut

இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் கங்கனா ரானவத்துக்கு ரூ.24 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக் கூடிய நடிகையாக கங்கனா மாறியுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த பத்மாவத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோன் அப்படத்திற்கு ரூ.13 கோடி சம்பளமாக வாங்கியதாக தெரிகிறது. அப்படி பார்த்தல், கங்கனா ரனாவத்துகு தலைவி படத்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் அதைவிட சுமார் இரு மடங்கு அதிகமாகும். பத்மாவத் படத்தில் நடித்த ஆண் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளனர்.

kangana ranaut

ஜெயலலிதா பயோபிக்கில் நடிப்பது குறித்து நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில், என்னுடைய சொந்த பயோபிக்கிற்காக நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஜெயலலிதாவின் வாழக்கையும் கிட்டத்தட்ட என்னுடைய வாழ்க்கை போன்றதே தான். சொல்லபோனால், என்னுடைய கதையை விட அவருடையது மிகப்பெரிய வெற்றிக் கதை. இப்படத்தின் கதையை கேட்ட போது, நிறைய ஒர்ற்றுமைகளை உணர்ந்தேன். பின்னர் என்னுடைய படமா? அல்லது ஜெயலலிதா படமா? என வந்தபோது, ஜெயலலிதா பயோபிக்கை நான் தேர்ந்தெடுத்தேன் என்றார்.

மாநில மொழிப் படங்களில் நடிக்கவே நானா எப்போதும் விரும்புவதுண்டு என குறிப்பிட்ட கங்கனா, தமழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் போது, அம்மாநில மக்கள் தங்களது சொந்த மாநில மொழிப் படங்களையே அதிகம் பார்ப்பது நமக்கு தெரியவரும். எனவே, நல்ல ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருந்த போது, இப்படம் அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

தமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பிரபல நடிகர் அதிரடி; காரணம் இதுதானாம்!