ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்?-உயர் நீதிமன்றம் கேள்வி

 

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்?-உயர் நீதிமன்றம் கேள்வி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சியில் பல்வேறு திருப்பங்கள், மரணத்தில் மர்மம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன அந்த வகையில், ஜெயலலிதா தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைக்காததால் அவரது சொத்துக்கள் நிர்வகிப்பது தொடர்பாகவும் பிரச்னைகள் எழுந்து வருகிறது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமாக பல ஆயிரம் கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். எம்ஜிஆர் சொத்துக்களை பராமரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனை நியமித்தது போல் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்கவும், அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, ரூ.913 கோடி சொத்துக்கள் உள்ளதால் நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க போவது யார் என கேள்வி எழுப்பியது. அத்துடன், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் ஆகியோர் உள்ளதால் இதுகுறித்து அவர்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.