ஜெயலலிதா கொடுத்த பரிசுப்பெட்டி! உற்சாகத்தில் டி.டி வி. தினகரன் குரூப்!

 

ஜெயலலிதா கொடுத்த பரிசுப்பெட்டி! உற்சாகத்தில் டி.டி வி. தினகரன் குரூப்!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னத்திற்கும் ஜெயலலிதாவுக்கும் ஒற்றுமை இருப்பதாக, டிடிவி தரப்பினர் கூறி வருகின்றனர். 

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னத்திற்கும் ஜெயலலிதாவுக்கும் ஒற்றுமை இருப்பதாக, டிடிவி தரப்பினர் கூறி வருகின்றனர். 

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ‘அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்’ வழங்கும் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம்

baby kit jaya

அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம்  என்று அழைக்கப்படும் இந்த பரிசுப்பொருளில் குழந்தையைப் பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையைப் பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு உட்பட ரூ.1000 மதிப்புள்ள 16 வகையான பொருட்கள் இருக்கும். இது தான் ஜெயலலிதா வழங்கிய கடைசி நல உதவி திட்டம் என்று கூறப்படுகிறது.

அம்மாவின் ஆசி கிடைத்திருப்பதாக உற்சாகம்

ttv

அதற்கு என்ன இப்போ? என்று தானே கேட்கறீர்கள். இந்த திட்டத்திற்கும், தினகரனின் பரிசுப்பெட்டி சின்னத்திற்கும் முடிச்சு போட துவங்கியுள்ளனர் அமமுகவினர் . ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இறுதியாக வழங்கிய நல உதவி திட்டத்தின் அடையாளம்தான் இப்போது தினகரன் தரப்புக்கு சின்னமாக கிடைத்திருக்கிறது! மறைமுகமாக அம்மாவின் ஆசி கிடைத்திருப்பதாக உற்சாகமாக சொல்கிறார்கள்.இந்த ஒரு ஒற்றுமை மட்டும் போதும், தினகரனுக்கு  வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும்  கூறி வருகின்றனர்.

ttv

ஆனால்  பொதுவாகவே பரிசு பிடிக்கத்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அப்படி மக்கள் விரும்பும் பரிசுபெட்டியை சின்னமாக பெற்றுள்ளதால், இந்த தேர்தலில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்  சேர்ப்பதில் பெரிதாக எந்த பிரச்னையும்  இருக்காது என்று அமமுகவினரால் நம்பப்படுகிறது.

இதையும் வாசிக்க: இதை விட அது தான் முக்கியம் – பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்