ஜெயலலிதா கதாபாத்திரத்தில கங்கனா நடிக்கக்கூடாது;  ஸ்ரீ ரெட்டி கருத்து?!

 

ஜெயலலிதா கதாபாத்திரத்தில கங்கனா நடிக்கக்கூடாது;  ஸ்ரீ ரெட்டி கருத்து?!

தலைவி என தமிழிலும், ஜெயா என இந்தியிலும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஏஎல் விஜய் இயக்குகிறார்.கங்கனா ரனாவத் இந்த படத்தில் நடிக்க அதிகம் சம்பளம் கேட்பதாக ஒரு செய்தி பரவி வந்தது. பின்னர் இதன் தயாரிப்பாளர், கங்கனா அதிக சம்பளம் கேட்பதற்கு தகுதியான நடிகைதான் என தெரிவித்திருந்தார்.

ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்று கதையான ‘மணிகர்னிகா’ படத்துக்கு பிறகு ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க கங்கனா ரனாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

kang

இதுகுறித்து அவர், தமிழ்நாடை ஒற்றை விரலால் கட்டி ஆண்ட இரும்பு மனுஷி ஜெயலலிதா. அவருக்கு மாற்று கிடையாது, வேறு யாரையும் அவர் இடத்தில் வைத்து நினைத்து பார்க்க முடியாது, அவர் ஒருவரே. ஆனால் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் அவசியமானது, நம் அடுத்த தலைமுறையினர் அவரை பற்றி அறிய அது உதவியாக இருக்கும். தென்னிந்திய நடிகைகள் யார் நடித்தாலும் பரவாயில்லை, கங்கனா வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.

தலைவி என தமிழிலும், ஜெயா என இந்தியிலும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஏஎல் விஜய் இயக்குகிறார்.கங்கனா ரனாவத் இந்த படத்தில் நடிக்க அதிகம் சம்பளம் கேட்பதாக ஒரு செய்தி பரவி வந்தது. பின்னர் இதன் தயாரிப்பாளர், கங்கனா அதிக சம்பளம் கேட்பதற்கு தகுதியான நடிகைதான் என தெரிவித்திருந்தார். கங்கனா தனது நடிப்புக்காக மூன்றுமுறை தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் வாசிக்க: ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்!