ஜெயலலிதா எப்படி இறந்தார்! குயின் ட்ரெய்லரில் வெளிவந்த அதிரடி காட்சிகள்!! 

 

ஜெயலலிதா எப்படி இறந்தார்! குயின் ட்ரெய்லரில் வெளிவந்த அதிரடி காட்சிகள்!! 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு ஜெயலலிதாவின் பயோபிக்  வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் , கிடாரி பட இயக்குநர்  பிரசாந்த் முருகேசனும் இயக்கி உள்ளனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு ஜெயலலிதாவின் பயோபிக்  வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் , கிடாரி பட இயக்குநர்  பிரசாந்த் முருகேசனும் இயக்கி உள்ளனர்.இந்த வெப் சீரிஸுக்கு குயின் என்று  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்படும். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. 

queen

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி ஷேஷாத்ரி என பெயரிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் எம்.ஜி.ஆருடன் கூடிய நட்பு, அதன்பின் நடிப்பு, அரசியல், என அனைத்தும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாவாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய வரிகளுடன் முடியும் இந்த வெப்சீரிஸின் கடைசி காட்சியில் ஜெயலலிதா கீழே விழுவது போலவும், அதன்பிறகு மருத்துவமனையில் இருப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது.

பின்னணியில் திறமையான பெண் என நினைத்தால் இவ்வளவு முட்டாளாக இருக்கிறாயே என்ற வாசகமும் இடம்பெறுகிறது. இந்த வெப் சீரிஸ் வரும் 14 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.