ஜெயலலிதாவை பார்த்தபோது அவர் எப்படி இருந்தார்? முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம்

 

ஜெயலலிதாவை பார்த்தபோது அவர் எப்படி இருந்தார்? முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம்

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கமளித்துள்ளார்.

டெல்லி: ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்  5-ம்தேதி உயிரிழந்தார். ஆனால் 2016 செப்டம்பர் 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா உயிரிழந்த போது தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் குடியரசுத்தலைவருக்கு அப்போது எழுதிய கடிதத்தில் இருந்த தகவல்கள் தற்போது வெளியாக்க்யுள்ளன. அதன்படி, ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினர். தலைமை செயலாளரிடம் சட்டம் – ஒழுங்கு குறித்து கேட்டறிந்தேன்.காவிரி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அவரை நான் அப்பல்லோவில் பார்க்கும்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என கூறியிருக்கிறார். 

முன்னதாக ஜெயலலிதாவை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர் சுய நினைவோடு தன்னை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் சிம்பல் காண்பித்ததாக வித்யாசாகர் ராவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.