ஜெயலலிதாவுக்கு கோயில்: இரண்டு வேளை தவறாமல் பூஜை செய்யும் அதிமுக தொண்டர்கள்!

 

ஜெயலலிதாவுக்கு கோயில்: இரண்டு வேளை தவறாமல் பூஜை செய்யும் அதிமுக தொண்டர்கள்!

எட்டு டன் எடையுள்ள கல்லில் ஒருபுறம் அனுமன், பைரவர், சிலுவை, இஸ்லாமிய மெத்தை  குறிப்பிடும் குறியீடு என அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.

கோவை: ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி அதிமுகவினர் வழிபட்டு  வரும் சம்பவம் ஒன்று கோவையில் அரங்கேறியுள்ளது. 

jayalalitha

கோவை மாநகராட்சியின் நூறாவது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது தனியாகச் சிலை என்று அமைக்காமல் எட்டு டன் எடையுள்ள கல்லில் ஒருபுறம் அனுமன், பைரவர், சிலுவை, இஸ்லாமிய மெத்தை  குறிப்பிடும் குறியீடு என அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. அதே போல் அந்த கல்லில் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக சின்னமான இரட்டை இலையும் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் இருவேளைகளிலும்  பூஜைகள்  நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுகிறது. 

jayalalitha

இக்கோவில் குறித்து கூறும் அப்பகுதியில் வசிக்கும் அதிமுகவினர், ‘சாகும் வரையில் ஏழைகளின் மீது அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தந்த அம்மாவுக்கு இந்த கோயில்  மூலம் நன்றிக்கடனை செலுத்துகிறோம். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மாவை வணங்கிச் செல்கின்றனர். வருங்கால சந்ததியினர் ஜெயலலிதாவைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த கோயில் உதவியாக இருக்கும்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.