ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா?

 

ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

chennai high court

அந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, வருமான வரித்துறை துணை ஆணையர், ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை இன்று தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 2016-2017-ஆம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1990-91 முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளதாகவும், 2005-06 முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Poes garden house

அத்துடன், ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு உள்பட அவரது 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை வருகிற ஜூன் மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

’அந்த ஆளு ஒரு சுயநலவாதி…’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..!