ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வழக்கில் திடீர் திருப்பம்: என்ன சொல்கிறது நீதிமன்றம்!

 

ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’  வழக்கில் திடீர் திருப்பம்: என்ன சொல்கிறது நீதிமன்றம்!

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற  எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

சென்னை: போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற  எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவர் உயிருடன் இருந்த வரை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ என்ற இல்லத்தில் தான் வாழ்ந்தார். அவர் மறைந்ததையடுத்து, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், போயஸ் கார்டன் பகுதியில் வசிப்பவர்களிடம் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டமும்  நடத்தப்பட்டது. 

jayahouse

இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் , அரசு செலவில் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

hc

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், இந்த அமர்வில் உள்ள நீதிபதி ஒருவர் ஏற்கனவே ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதனால் இந்த வழக்கை இந்த அமர்வு விசாரணை செய்யாது. மேலும் இந்த வழக்கை  வேறு நீதிபதிகள் அமர்வுக் மாற்றத் தலைமை நீதிபதிக்கு அவர்கள் பரிந்துரை செய்தனர்.