ஜெமினி பாலத்தில் பாமாயில் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

 

ஜெமினி பாலத்தில் பாமாயில் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

லாரி ஓட்டுநர் உஷாராகி கீழே குதித்ததால், எந்த வித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார். 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பினும் அத்தியாவசிய தேவைகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவித்தது. அதன் படி உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து பாமாயில் லாரி காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளது. அந்த லாரி சென்னை ஜெமினி பாலத்தில் இருந்து இறங்கும் போது, எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது. லாரி ஓட்டுநர் உஷாராகி கீழே குதித்ததால், எந்த வித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார். 

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த 24 ஆயிரம் லிட்டர் எண்ணெய், லாரி கவிழ்ந்ததால் சாலையில் கொட்டி வெள்ளம் போல ஓடியுள்ளது. தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.