ஜூன் மாதத்தில் நியூயார்க் நகரம் திறக்க முடிவு: மேயர்

 

ஜூன் மாதத்தில் நியூயார்க் நகரம் திறக்க முடிவு: மேயர்

ஜூன் மாதத்தில் நியூயார்க் நகரம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேயர் கூறியுள்ளார்.

நியூயார்க்: ஜூன் மாதத்தில் நியூயார்க் நகரம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேயர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கொரோனா தொற்றுநோயின் மையமான நியூயார்க் நகரத்தில் ஜூன் மாதம் ஊரடங்கை தளர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேயர் பில் டி பிளேசியோ பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், நியூயார்க் மாநிலத்தின் மூன்று பகுதிகள் மட்டும் மே 15 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.

New York

நியூயார்க் நகரில் கொரோனா பாதிப்பால் தினசரி மருத்துவமனையில் சேருபவர்கள் எண்ணிக்கை, ஐ.சி.யூ சேர்க்கை மற்றும் இறப்புக்கள் குறைந்து வருவதாக பதிவு செய்துள்ளது. ஆனால் நகரத்தை மீண்டும் திறப்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்வதற்கு முன்னர் இதுபோன்ற முன்னேற்றம் தொடர வேண்டும் என்று மேயர் கூறினார்.