ஜீன்ஸ் போட்டுட்டு வந்த லைசன்ஸ் கிடையாது… போயிட்டு சுடிதார போட்டுட்டு வா! ஆர்டிஓவின் அதிரடி ஆர்டர் 

 

ஜீன்ஸ் போட்டுட்டு வந்த லைசன்ஸ் கிடையாது… போயிட்டு சுடிதார போட்டுட்டு வா! ஆர்டிஓவின் அதிரடி ஆர்டர் 

சென்னை கே.கே. நகர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு லைசன்ஸ் வாங்க வந்த பெண்ணை ஆர்டிஓ திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கே.கே. நகர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு லைசன்ஸ் வாங்க வந்த பெண்ணை ஆர்டிஓ திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கே.கே. நகரிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் வாங்க வந்த ஒரு பெண் ஜீன்ஸ் பேண்ட்டும், ஸ்லீவ் லெஸ் டாப்ஸும் அணிந்து சென்றுள்ளார். ஓட்டுநர் உரிமம் பெற எட்டு போட்டு காட்ட வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி வண்டியுடன் எட்டுப்போட்டு சோதனையில் ஈடுபட சென்ற அந்த பெண்ணை நிறுத்திய ஆர்டிஓ உடையை காரணம் காட்டி வெளியேற்றினார். மேலும் வீட்டிற்கு சென்று உடையை மாற்றிவரும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும் வீட்டிற்கு சென்று சல்வார் உடையை மாற்றிவந்து ஓட்டுநர் உரிம சோதனையில் பங்கேற்றார்.

Bike

இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன் முகம் சுழிக்க வைக்கும் ஆடையை அணிந்து வந்ததற்காக கல்லூரி மாணவி ஒருவரையும் ஓட்டுநர் உரிம சோதனைக்கு அனுமதிக்காமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளார் அந்த அதிரை ஆர்டிஓ.