ஜீன்ஸ் பேண்டில் மறைந்து தங்கம் கடத்தல் – விமான நிலையத்தில் பரபரப்பு!

 

ஜீன்ஸ் பேண்டில் மறைந்து தங்கம் கடத்தல் – விமான நிலையத்தில் பரபரப்பு!

தங்கம் கடத்தல் என்பது சமீபகாலமாக அதிகரித்த வண்ணமே உள்ளது. தங்கம் விலை உயர்வும் இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. பல சினிமாக்களில் காட்டப்படும் வகையில் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபர்கள் சென்னை விமானநிலையத்தில் பிடிபட்டனர்.

நேற்று, துபாயிலிருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 1644 என்கிற விமானத்தில் பயணம் செய்தார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 27 வயதான அஹமத் அனாஸ். அவரின் நடவடிக்கைகள் விநோதமாக இருந்ததால், சந்தேகத்தின் பேரில் விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஜீன்ஸ் பேண்டில் மறைந்து தங்கம் கடத்தல் – விமான நிலையத்தில் பரபரப்பு!

அவரைச் சோதனை இட்டபோது அவரது உடலில் மருந்து கட்டு போடப்பட்டு இருந்தார். ஆனால், அது வழக்கமான மருந்து கட்டைப் போல இல்லை. வித்தியாசமாக இருந்தது. அதனால், சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதனை சோதனை செய்தார்கள். மருந்து கட்டுக்குள் 168 கிராம் எடையில் இரண்டு தங்கப் பசை பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரிடமிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பில் 147 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

சனிக்கிழமை அன்று துபாயிலிருந்து ஏர் இந்தியா ஏஐ 906 விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்தவர்கள் 48 வயதான ஜும்மா கான் மற்றும் 46 வயதான முகமது ரஃபி. இவர்களையும் விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.

ஜீன்ஸ் பேண்டில் மறைந்து தங்கம் கடத்தல் – விமான நிலையத்தில் பரபரப்பு!

அவர்களைச் சோதனையிட்டதில், அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் உடையின் உள்ளே 176 கிராம் எடையுள்ள 4 தங்க பொட்டலங்கள் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 7.23 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த இரு சம்பவங்களில் இருந்தும் மொத்தம் 289 கிராம் எடையில் ரூ. 14.73 லட்சம் மதிப்பிலான தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.