ஜி20 மாநாடு இந்தியாவில் எப்போது? மோடி விளக்கம்

 

ஜி20 மாநாடு இந்தியாவில் எப்போது? மோடி விளக்கம்

இந்தியாவில் 2022-ம் ஆண்டு ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பியூனஸ் அயர்ஸ்: இந்தியாவில் 2022-ம் ஆண்டு ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அர்ஜென்டினா நாட்டில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இதற்கிடையே 2022-ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டினை இத்தாலி நடத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநாட்டினை நடத்தும் வாய்ப்பை இந்தியாவிற்கு இத்தாலி வழங்கியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ,2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.  இதில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வரும்படி ஜி20 நாட்டு தலைவர்களை அழைக்கிறேன். அந்த வருடத்தில் இந்தியா தனது 75வது வருட சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது.  இந்த சிறப்பு நிறைந்த ஆண்டில் உலக தலைவர்களை வரவேற்கிறோம். மிக வேகமுடன் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாட்டுக்கு வாருங்கள்.

இந்தியாவின் வளமிக்க வரலாறு மற்றும் பன்முக தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள். இந்தியாவின் விருந்தோம்பலை பற்றி அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.