ஜி.டி.பி ஒன்றும் பைபிள், ராமாயணம் இல்லை!- பா.ஜ.க எம்.பி-யின் அடடே விளக்கம்

 

ஜி.டி.பி ஒன்றும் பைபிள், ராமாயணம் இல்லை!- பா.ஜ.க எம்.பி-யின் அடடே விளக்கம்

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைந்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் வேளையில், ஜி.டி.பி என்பது ஒன்றும் பைபிள், ராமாயணம், மகாபாரதம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி நிஷிகாந்த் தூபே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nishikanth

பொருளாதாரம் மற்றும் ஜி.டி.பி சரிவு பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பேசி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜி.டி.பி மிகவும் குறைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் நிதி அமைச்சர், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி நிஷிகாந்த் தூபே பேசும்போது, “ஜி.டி.பி-யை விட நிலையான நீடித்த பொருளாதார வளர்ச்சியே முக்கியமானது. 1934க்கு முன்பு ஜி.டி.பி என்ற ஒரு விஷயமே இல்லை. 

gdp

பொருளாதார நிபுணர் சைமன் குஸ்நெட் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பைபிளாக, ராமாயணமாக, மகாபாரதமாக நம்புவது சரியானதாக இருக்காது, இதனால் பெரிய பயனுள்ள எதிர்காலம் இல்லை என்று கூறியுள்ளார். இதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.