ஜி.எஸ்.டி. 2 ஆண்டு நிறைவு: 1ம் தேதி கொண்டாடுகிறது மத்திய அரசு

 

ஜி.எஸ்.டி. 2 ஆண்டு நிறைவு: 1ம் தேதி கொண்டாடுகிறது மத்திய அரசு

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 2 ஆண்டு நிறைவை வரும் 1ம் தேதி அதனை மத்திய அரசு கொண்டாடுகிறது.

உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு கொண்டு வந்தது. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வரும் நோக்கில் ஜி.எஸ்.டி.  கொண்டு வரப்பட்டது. பல ஆண்டுகளாக சவ்வாக இழுத்து கொண்டு இருந்த ஜி.எஸ்.டி. மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றியது.

நிர்மலா சீதாராமன்

இதனையடுத்து 2017 ஜூலை 1ம் தேதி மிகவும் கோலாகலமாக ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தது. நாளையுடன் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்து இரண்டாடுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. 2 ஆண்டு வெற்றியை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அனுராக் தாக்கூர்

வரும் ஜூலை 1ம்  தேதி டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஜி.எஸ்.டி. விழா நடைபெற உள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் ஜி.எஸ்.டி.யின் புதிய வரிதாக்கல் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்.