ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க முடியாது! வெயிட் பண்ணுங்க!

 

ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க முடியாது! வெயிட் பண்ணுங்க!

வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க முடியாது என வருவாய் துறை செயலர் அஜய் புஷன் பான்டே கூறுகிறார்.

2017ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதற்கு முன்பு வரை இருந்த பல மறைமுக வரிகளுக்கு மாற்றாகவும், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை நடைமுறைப்படுத்தும் வகையிலும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்தது. 

ஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி.யில் தற்போது 5,12,18 மற்றும் 28 என நான்கு வரி விகிதங்கள் உள்ளன. 28 சதவீத வரி பிரிவில் ஆடம்பர பொருட்கள், புகையிலை போன்ற பொருட்கள் இடம் பிடித்துள்ளன. அதேசமயம் 5 சதவீத வரி விதிப்பு பிரிவில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் வருகிறது.

சொகுசு கார்

இந்நிலையில், மேலும் சில பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரி விதிப்புக்கு காத்திருக்க வேண்டும் என மத்திய வருவாய் துறை செயலர் அஜய் புஷன் பான்டே கூறுகிறார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யபட்டு விட்டால் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க முடியாது. என வரி விதிப்புக்கு காத்திருக்க வேண்டும் என கூறினார்.